பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 23-
சபா மாநில சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறும் என்று மாநில முதலமைச்சர் ஹாஜி நூர் இன்று கோடி காட்டியுள்ளார்.
சபா சட்டமன்றத்தின் நடப்பு தவணைக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. எனினும் மாநில தேர்தல் அதற்கு முன்னதாகவே நடைபெற்று விடும் என்று அவர் குறிப்பிட்டார்.
எனவே சபா மாநிலத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வேலைகள் அனைத்தும் இப்போது முதல் கொண்டு நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.