குற்றச்சாட்டை மறுத்தது கோலாலம்பூர் மாநகர் மன்றம்

கோலாலம்பூர், செப்டம்பர் 23-

கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் – சாலையில் ஆள்விழுங்கும் திடீர் குழி ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை கோலாலம்பூர் மாநகர் மன்றமான டி.பி.கே.எல் இன்று வன்மையாக மறுத்துள்ளது.

ஆபத்து நிறைந்த அந்த பாதாளக்குழி பகுதியில் விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நிகழ்ந்து விடாமல் இருக்க தீயணைப்பு, மீட்புப்படையினர் கண்காணித்து வருவதாக அந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தவிர பாதுகாப்பு வளையங்கள் கட்டுப்பட்டு, கோலாலம்பூரின் பிரதான சாலையான Jalan Raja Chulan அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளதாகவும் அந்த 10 விநாடி காணொளில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இது முற்றிலும் தவறான தகவலாகும். சம்பந்தப்பட்ட பகுதியில் நிலத்தடி நீர் குழாய் உடைந்ததன் காரணமாக அந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று டி.பி.கே.எல் விளக்கம் அளித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS