கோலாலம்பூர், செப்டம்பர் 23-
ஒரு கட்டடத்தின் முன், கொடி கம்பங்களில் மலேசிய தேசிய கொடியான Jalur Gemilang இறக்கப்பட்டு, சபா, சராவாக் மாநில கொடிகள் ஏற்றப்படுவதைப் போல சமூக வலைளத்தளங்களில் வைரலாகி வரும் காணொளி தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் தன் ஸ்ரீ ரசாருதீன் ஹசைன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சபாவில் 34 புகார்களையும், கோலாலம்பூரில் ஒரு புகாரையும் போலீஸ் துறை பெற்றுற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த காணொளியை முதலில் வெளியிட்ட நபர், சபாவைச் சேர்ந்தவர் என்று தரவுகள் காட்டுகின்றன. சம்பந்தப்பட்ட நபருக்கு இரண்டு குற்றப்பதிவுகள் உள்ளன என்று கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐஜிபி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலேசிய தினமாக கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியா, Victoria Melbourne நாடாளுமன்றக்கட்டத்தின் முன் வளாகத்தில் அந்த வீடியோப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை சமூக வலைத்தளங்களில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தன் ஸ்ரீ ரசாருதீன் ஹசைன் குறிப்பிட்டார்.