பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 24-
ஏ-ஹேலிங் ஓட்டுநர் ஒருவரை கொலை செய்ததாக அவரின் முன்னாள் மனைவி மற்றும் வளர்ப்பு சகோதரன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் மனைவியான 35 வயது நூரிமா ஜூலி மற்றும் வளர்ப்பு சகோதரன் 39 வயது சதாம் கிரம் ஆகிய இருவரும் சபா, தவாவ் உயர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி டங்கன் சிகோடோல் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அவ்விருவரும், தங்களுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆ ம் தேதி இரவு 11.30 மணியளவில் தவாவ், பாரு 5 ஜாலான் அபாஸ், ஜாலான் அஞ்சூர் ஜுவாரா -வில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் 61 வயது நூர்மன் பகரது என்ற e-hailing ஓட்டுநரை வெட்டிக்கொலை செய்ததாக அவ்விருவரும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.