தம்பதியர் உட்பட ஐவருக்கு போலீஸ் வலைவீச்சு

பாலிக் புலாவ், செப்டம்பர் 24-

பினாங்கு, பாலிக் புலாவ், தெலுக் கும்பர் – ரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் பட்டறையின் உரிமையாளர் மற்றும் வேலையாட்களை அடித்து, காயம் விளைவித்தப்பின்னர் அவர்களின் உடமைகளை கொள்ளையடித்ததாக நம்பப்படும் சம்பவம் தொடர்பில் ஒரு தம்பதியர் உட்பட ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த பட்டறையின் முதலாளி அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து 23 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரையும் போலீசார், பாலிக் புலாவ், தாமன் நெலயன், லிண்டாங் நெலாயன் 2 என்ற இடத்தில் கைது செய்ததாக பினாங்கு, பரத் டயா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் கமருல் ரிசல் தெரிவித்தார்.

சம்பவம் நிகழும் போது அந்த பட்டறையின் உரிமையாளரும், இரண்டு வேலையாட்களும் கடையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கடைக்கு வந்த ஆறு நபர்களில் இருவர், கடை உரிமையாளருக்கு நன்கு அறிமுகமானவர்கள் ஆவர்.

அந்த அறுவரில் ஒருவர், திடீரென்று பட்டறை பணியாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததுடன், இரும்புத்தடியை கொண்டு தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க சென்ற கடை உரிமையாளரும் சம்பந்தப்பட்ட கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த சந்தேகப் பேர்வழிகள், கடை உரிமையாளருக்கு சொந்தமான வெள்ளியிலான கை வளையம், பணியாளர்களின் தங்கச் சங்கிலிகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று சுப்பரின்டெண்டென் கமருல் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் ஒரு தம்பதியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS