மஹ்கோட்டா தொகுதியில் முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது

குளுவாங் , செப்டம்பர் 24-

ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் வேளையில் முன்கூட்டியே வாக்களிப்பு, இன்று செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது.

போலீஸ்காரர்கள் மற்றும் இராணுவத்தினர் முன்கூட்டியே வாக்களிப்பதற்கு ஏதுவாக மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதியில் மூன்று இடங்களில் வாக்குப்பதிவு காலை 8.00 மணிக்கு தொடங்கியது.

கெம் மஹ்கோடா- வில் டெவான் மஹ்கோட்டா /டெ வான் பெங்கமான் ஜம்ருத் தாமன் பெருமான் போலிஸ் IPD குளுவாங் மற்றும் குளுவாங், சுல்தான் சர் இப்ராஹிம் தேசியப் பள்ளி ஆகியவை அந்த மூன்று வாக்களிப்பு மையங்களாகும்.

காலை 8.00 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு, மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. முன்கூட்டியே வாக்களிப்பதற்கு 4 ஆயிரத்து 510 இராணுவ வீர்ர்களும், 401 போலீஸ்காரர்களும் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS