மந்தின் வட்டாரத்தில் 100 வீடுகள் சேதம்

சிக்,செப்டம்பர் 24-

நேற்று திங்கட்கிழமை, மாலையில் வீசிய பலத்த காற்று மற்றும் கனத்த மழையில் நீலாய், மந்தின் வட்டாரத்தில் குறைந்த பட்சம் 100 வீடுகளின் கூரைகள் பலத்த சேதமுற்றன.

சுழல் காற்றில் வீடுகளின் மேல் கூரைகளில் ஓடுகள், பிரதான மரச்சட்டங்கள் பெயர்த்துக்கொண்டு பறந்து விழுந்தன.

மாலை 5 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்ட மரங்கள், வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்தன. அதிர்ஷ்டவசமா உயிருடன் சேதம் எதுவும் நிகழ்வில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த Nilai சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அருள் குமார் , இந்த இயற்கை சீற்றத்தில் தாமன் ஸ்ரீ டமர், தாமன் தேச மந்தின் , கம்போங் பாரு மந்தின் , பெக்கன் மந்தின் ஆகியவை பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இவற்றில் தாமன் தேச மந்தின் கடுமையாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அருள்குமார், இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் கடுமையாக சேதமுற்றதாக தெரிவித்தார்.

இறைவன் அருளில் எந்தவொரு உயிருடன் சேதமும் நிகழவில்லை என்று அவர் குறிப்பிட்டார். சேதமுற்ற வீடுகளில் சீரமைப்புப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக அருள்குமார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS