கோர விபத்தில் இரண்டு சகோதர்கள் உயிரிழந்தனர்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 24-

இரண்டு சகோதரர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நகரும் RORO குப்பைத் தோம்பில் மோதியதில் இவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் மலாக்கா, க்ருபோங், ஸ்டேடியம் ஹேங் ஜெபாட் அருகில் லெபோ ஸ்பா சாலையில் நிகழ்ந்தது.

18 வயது முஹம்மது அமீருல் ஹாஸ்லின் மற்றும் அவரின் 5 வயது சகோதரர் நூர் அஃபிகா ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரழந்தனர்.

பத்து மாதங்களுக்கு முன்பு இறந்த தங்களது தந்தையின் கல்லறையை பார்வையிட்டப்பின்னர் அவ்விருவரும் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தாக தெரிவிக்கப்பட்டது.

அவ்விரு சகோதர்களும் ஆயர் கெரோஹ் -விலிருந்து சுங்கை உடாங் – கை நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS