முன்னாள் குழந்தை பராமரிப்பாளருக்கு 14 மாத சிறை

காஜாங் ,செப்டம்பர் 24-

கடந்த மே மாதம் ஒன்றரை வயது குழந்தையிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக குழந்தை பராமரிப்பாளர் ஒருவருக்கு காஜாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 14 மாத சிறைத் தண்டனை விதித்தது.

24 வயது நொர் ஐன் இஸ்மாயில் என்ற அந்த குழந்தை பராமரிப்பாளர், நீதிபதி மசூலியானா அப்துல் ரஷீத் முன்னிலையில் மீண்டும் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்ப்டட போது அந்தப் பெண், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த மே 28 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில் சேராஸ், பந்தர் மகோட்டா சேராஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் அந்தப் பெண் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS