தாசேக் கெலுகோர், செப்டம்பர் 24-
பினாங்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 202 குடும்பங்களுக்கு கூட்டரசு அரசாங்கத்தின் நிதி உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1,500 வெள்ளி வழங்கப்பட்டது.
இந்த 1,500 வெள்ளி நிதி உதவியில் 500 வெள்ளி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், எஞ்சிய ஆயிரம் வெள்ளி, NADMA ( நட்மா ) எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக ஏஜென்சியும் வழங்கியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் தத்தம் வீடுகளிலிருந்து நிவாரண மையங்களுக்கு இடம் மாற்றப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக Shamsul Iskandar விளக்கினார்.