குளுவாங் , செப்டம்பர் 24-
ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வேளையில் இந்த இடைத் தேர்தல் தொடர்பில் இதுவரை ஒரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களை கவர்வதற்காக கையூட்டுத் தன்மையிலானது என்று கூறப்படும் அனுமதிக்கப்படாத உள்ளடக்கம் ஒன்றை பதிவேற்றம் செய்தது தொடர்பில் தனிநபர் ஒருவருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.