பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 24-
சமூக நல இல்லங்களிலிருந்து சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்ட Global Ikhwan Holdings நிறுவனம் மீதான விசாரணையில் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் -வை பயன்படுத்த வேண்டாம் என்று போலீஸ் துறையை பெட்டாலிங் ஜெயா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.
அந்த நிறுவனத்தில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் சந்தேகப் பேர்வழிகள் அனைவரும், நீதிமன்ற்ததில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டுமே தவிர சொஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் பயன்படுத்தக்கூடாது என்று பெர்சிஹ் இயக்கத்தின் முன்னாள் தலைவரான மரியா சின் வலியுறுத்தினார்.
Global Ikhwan Holdings நிறுவனம் தொடர்புடைய இந்த வழக்கு பொது நலன் சார்ந்த ஒன்று என்பதால் இவ்விவகாரம் நீதிமன்றத்தில் பொது விசாரணைக்கு வர வேண்டும் என்பதே தவிர சொஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்ற பெயரில் அழுத்தப்பட்டு விடக்கூடாது என்று சமூக போராட்டவாதியுமான மரியா சின் கேட்டுக்கொண்டார்.