மாற்றுத்திறனாளி மகள் பாலியல் பலாத்காரம், தந்தைக்கு 25 ஆண்டு சிறை

புத்ராஜெயா,செப்டம்பர்

ஒரு மாற்றுத் திறனாளியான தனது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு விதிக்கப்பட்ட 25 ஆண்டு சிறை மற்றும் 10 பிரம்படித் தண்டனையை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

38 வயது நபருக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த அந்த தண்டனையை நிலைநிறுத்துவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ அகமது ஜைதி இப்ராஹிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த ஆடவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி இரவு 9 மணியளவில் சிலாங்கூர், சபா பெர்னாம் – மில் உள்ள தனது வீட்டில் ஒரு மாற்றுத்திறனாளியான 14 வயது மகளை பாலியல் பலாக்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

WATCH OUR LATEST NEWS