இந்தியாவுடன் Harimau Malaya நட்புறவு ஆட்டம்

கோலாலம்பூர், செப்டம்பர் 25-

மலேசியாவின் தேசிய கால்பந்து குழுவான Harimau Malaya அணி, வரும் நவம்பர் 19ஆம் தேதி இந்தியாவுடன் நட்புறவு கால்பந்தாட்டத்தில் பங்கேற்கிறது.

இதனை மலேசிய கால்பந்து சங்கமான FAM ஓர் அறிக்கையின் வழி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நட்புறவு ஆட்டத்தின் உபசரணை நாடான இந்தியாவின் அகில இந்திய கால்பந்து சங்கத்துடன் கலந்து பேசி, தீர்க்கமாக முடிவு எடுக்கப்பட்ட பின்னர் நட்புறவு ஆட்டத்திற்கான இடம் மற்றும் நேரம் முடிவு செய்யப்படும் என்று FAM அறிவித்துள்ளது.

உலக கால்பந்து சங்கத்தின் அனைத்துலக சம்மேளனமான FIFA- காலண்டருக்கு ஏற்ப நவம்பர் 11 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இந்த ஆட்டம் நடைபெறும் என்று FAM குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS