மீன்பிடித்துக்கொண்டு இருந்த ஆடவர் மூழ்கினார்

ஜொகூர் , செப்டம்பர் 25-

கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றின் அருகில் உள்ள கால்வாயில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த ஆடவர் ஒருவர், சாக்கடைத் தொட்டியில் விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் இன்று அதிகாலையில் ஜோகூர்பாரு, ஜாலான் இஸ்மாயில் சுல்தான் சாலையில் நிகழ்ந்தது. இதில் 26 வயது நபர் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.

உள்ளூரைச் சேர்ந்த அந்த ஆடவரின் இறப்பை, போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS