கோலாலம்பூர், செப்டம்பர் 25-
உடல் ஆரோக்கியம் நிறைந்த நல்வாழ்வை உறுதி செய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று சீனியின்றிய நல்வாழ்வு பிரச்சாரம் முடுக்கிவிடப்படும் என்று நாடாளுமன்ற சபா நாயகர் சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தெரிவித்தார்.
அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சீனி அறவே புழக்கத்தில் இருக்காது. முற்றாக தடை விதிக்கப்படும். காப்பி, தேநீர் மற்றும் சுவை பானத்தில் சீனி பயன்படுத்தப்படாது என்று அவர் விளக்கினார்.
ஆரோக்கிய வாழ்வு குறித்து மக்களுக்கு போதிக்கப்படுவதற்கு முன்னதாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
அதிகமான சீனி பயன்பாடுயின்றி நல்வாழ்வை அவர்கள் பேண வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் நாடாளுமன்றத்தில் சீனியில்லாத நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று டான்ஸ்ரீ ஜோஹாரி குறிப்பிட்டார்.