ஜொகூர் , செப்டம்பர் 25-
ஜோகூர் பாருவில் அந்நிய நாட்டு பிச்சைக்காரர்களை துடைத்தொழிக்கும் ஓப் செர்காப் சோதனை நடவடிக்கையை மலேசிய குடிநுழைவுத்துறை நேற்று திங்கட்கிழமையும், இன்று செவ்வாய்க்கிழமையும் மேற்கொண்டது.
இதில் சீன நாட்டுப்பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டது மூலம் அந்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளை பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்த கும்பலை குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது.
ஜோகூர்பாருவில் பசார் மலம் மற்றும் இதர வர்த்தகத் தளங்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 36 க்கும் 67 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தாருஸ் தெரிவித்தார்.