ஜாலான் ஸ்ரீ முடா, கோத்தா கெமுனிங் வெள்ளக்காடானது

ஷா ஆலம், செப்டம்பர் 25-

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் ஷா ஆலாம் ஜாலான் ஸ்ரீ முடா மற்றும் கோத்தா கெமுனிங் சுற்றுவட்டாரப்பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

திடீர் வெள்ளம் குறித்து மேற்கண்ட இரு பகுதிகளிலிருந்து தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக ஷா ஆலாம் தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

வெள்ள நிலைமை குறித்து ஷா ஆலாம் தீயணைப்பு, மீட்புப்படையினர் ஜாலான் கெபுன் பகுதியிலும், ஸ்ரீ ஆண்டாள்ஸ் மீட்புப்படையினர் கோத்தா கெமுனிங்- கையும் அணுக்கமாக கண்காணித்து வந்தாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் வெள்ள நிலைமை கட்டுப்பாட்டில் இருந்ததுடன் வெள்ளம் கட்டம் கட்டமாக வடியத் தொடங்கியதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS