ஆலோர் ஸ்டார்,செப்டம்பர் 25-
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா-விடம் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி முஹமட் நோர் இன்று பகிரங்க மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்.
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் கோம்பாக், தாமன் செலயாங் முத்தியர-வில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் தேதி தாம் ஆற்றிய உரைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.
தம்முடைய இந்த கோரிக்கையை ஏற்று, தம்மை மன்னித்து, அருளவேண்டும் என்று சிலாங்கூர் சுல்தானை, சனூசி மிக உருக்கமாக கேட்டுக்கொண்டார்.
சனூசி, நிந்தனை தன்மையில் உரையாற்றியதற்காக அவருக்கு எதிராக 3R சட்டத்தின் கீழ் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.