எந்தவொரு நோட்டீசையும் நாடாளுமன்றம் பெறவில்லை

கோலாலம்பூர், செப்டம்பர் 25-

நாட்டின் 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்ற மக்களவைக்கூட்டத் தொடர், அடுத்த மாதம் தொடங்குகிறது.

இந்நிலையில் மக்களவைக்கூட்டத் தொடரில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான எந்தவொரு அறிக்கையையும் எதிர்க்கட்சி எம்.பி.களிடமிருந்து தாம் பெறவில்லை என்று சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தெரிவித்தார்.

அதேவேளையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல், வெறும் வதந்தியே என்று ஜோஹாரி அப்துல் வர்ணித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS