கோலாலம்பூர், செப்டம்பர் 25-
எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று அது குறிப்பிட்டுள்ளது.
அவை லிட்டருக்கு முறையே 2 வெள்ளி 05 காசு, 3 வெள்ளி 19 காசு, 2 வெள்ளி 95 காசு என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.