ஜொகூர் , செப்டம்பர் 25-
மலேசிய குடிநுழைவுத்துறை, ஜோகூர்பாரு, தாமன் தயா- வை இலக்காக கொண்டு சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் உணவகங்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவக்கையில் சட்டவிரோதமாக வேலைசெய்து வந்த 45 அந்நிய நாட்டவர்களை கைது செய்துள்ளது.
ஓபிஎஸ் மாஹிர், ஓபிஎஸ் தண்டன், ஓபிஎஸ் பெலன்ஜா மற்றும் போஸ் செலரா ஆகிய பெயர்களில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் மாநில இயக்குநர்டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தாருஸ் தெரிவித்தார்.
இதில் 19 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய 45 அந்நிய நாட்டவர்கள், தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.