மருத்துவ அதிகாரிகளுடன் ஆற்றில் ஹெலிகாப்டர் அவசரத் தரையிறக்கம்

கோத்தா கினபாலு, செப்டம்பர் 25-

சுகாதார அமைச்சின் நான்கு மருத்துவர்களுடன் ஐவரை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்படர் ஒன்று, ஒரு நீரோடையில் அவசரமாக தரையிறங்கியது.

இச்சம்பவம் இன்று மதியம் சபா, கோத்தா கினாபாலு அருகில் பெனாம்பாங், கம்போங் புயான் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

லயாங்- லயாங் விண்வெளி நிறுவனத்திற்கு சொந்தமான Bell 206 B jet Ranger ரகத்திலான அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது மூலம் விரும்பத்தகாத சம்பவம் நிகழ்வது தவிர்க்கப்பட்டுள்ளது.

சபாவில் உள்ள ஓர் ஒதுக்குப்புறமான பகுதியில் மருத்துவ சேவையை வழங்குவதற்காக சுகாதார அமைச்சின் மருத்துவர்களுடன் அந்த ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தாக சபா வான்போக்குவரத்து துறையின் தலைவர் டத்தோ கென்னி சுவா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS