கோலாலம்பூர், செப்டம்பர் 27-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி, 4 ஆம் தேதி வரை பாகிஸ்தானுக்கு அலுவல் பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமரின் இந்த அலுவல் பயணம், மலேசியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இரு வழி அரசியல் உறவு மற்றும் தூதரக உறவை மேலும் வலுப்படுத்துவதுடன் அதிகமான பலாபலனை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தானுக்கான மலேசியத் தூதர் சையத் அஹ்சன் ரசா ஷா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மலேசிய பிரதமர் ஒருவர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் பாகிஸ்தான் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மலேசியப் பிரதமரின் இந்த வருகையை காண பாகிஸ்தான் மக்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர் மக்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர் என்று மலேசியத் தூதர் சையத் அஹ்சன் குறிப்பிட்டார் லேசியத் தூதர் சையத் அஹ்சன் குறிப்பிட்டார்.