சிப்பாங் இடைக்கால போலீஸ் தலைவராக ஷான் கோபால் கிருஷ்ணன் நியமனம்

செப்பாங் ,செப்டம்பர் 27-

சிப்பாங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவராக ஷான் கோபால் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவிக்காலம், இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

சிப்பாங் போலீஸ் தலைவராக பதவி வகித்து வந்த ஏசிபி கமருல் அஸ்ரான் வான் யூசோப் , சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் புதிய பதவி நியமனத்தைத் தொடர்ந்து சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போலீஸ் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஷான் கோபால் கிருஷ்ணன் , மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்தார்.

இந்த பதவி நியமனப் பரிமாற்றம், இன்று சிப்பாங் போலீஸ் தலைமையகத்தில் டத்தோ ஹுசைன் ஓமர் தலைமையில் நடைபெற்றது.

WATCH OUR LATEST NEWS