முகைதீனுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது

கோலாலம்பூர், செப்டம்பர் 27-

நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமரும்,பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிரான வழக்கு வரும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுதலை செய்துள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று முகைதீன் செய்துகொண்ட மேல்முறையீட்டை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

இவ்வழக்கு விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற வேண்டும் என்று அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து முகைதீனுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கான தேதியை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று நிர்ணயித்து இருந்தது.

இவ்வழக்கு, நான்கு குற்றச்சாட்டுகளுடன் மேலும் 3 குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டு 7 குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஏகக்காலத்தில் விசாரணைக்கு வருகிறது.

WATCH OUR LATEST NEWS