அந்த ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டு இருந்தார்

நீலாய் ,செப்டம்பர் 28-

சிரம்பான், நீலாய், Persiaran Golf சாலை சந்திப்பில் நேற்று மாலையில் மணல் லோரி ஒன்று, சமிக்ஞை விளக்குப்பகுதியில் நின்று கொண்டு இருந்த ஐந்து கார்களை மோதித்தள்ளி, ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள லோரி ஓட்டுநர், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

30 வயது மதிக்கத்தக்க அந்த லோரி ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர். Methamphetamine வகையை சேர்ந்த போதைப்பொருளை உட்கொண்டு இருந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நீலாய் போலீஸ் துணைத் தலைவர் மட் கானி லதே தெரிவித்தார்.

அந்த நபர், 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு ஏதுவாக இன்று தொடங்கி, நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக மட் கானி குறிப்பிட்டார்.

நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் காரில் பயணித்த 31 வயது மாது ஒருவர், தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார். மற்ற கார்களில் பயணித்தவர்கள் சொற்பகாயங்களுக்கு ஆளானதாக மட் கானி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS