ரவாங்,செப்டம்பர் 28-
ரவாங், / புசாட் பந்தர் ரவாங்,/ ஜாலான் Maxwell-லில் உள்ள கார சாரம், Claypot உணவகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வெகுவிமரிசையாக கொண்டது.
ஸ்ரீதரன் நல்லையாவை தோற்றுநராக கொண்டுள்ள கார சாரம் உணவகத்தின் / ரவாங் உணவகம்,/ புதிய தோற்றம் என்ற கருப்பொருளுடன் பல்வேறு புதிய வகை பாதார்த்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த மூன்றாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் அதிகமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.
டத்தோ பாலு, டத்தோ கணேசன் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்ததுடன், வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த நிலையில் மூன்றாம் ஆண்டை வெற்றிகரமாக கால்பதித்து இருக்கும் ரவாங், கார சார உணவகத்தின் பொறுப்பாளர்களுக்கு தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டானர்.

18 கிளை உணவகங்களை கொண்டுள்ள கார சாரம் உணவக சங்கிலித் தொடர்பு வர்த்தகத்திற்கு, ரவாங் கார சாரம் உணவகம் மூன்றாவது கிளை உணவகமாகும்.
பினாங்கில் உள்ள கார சாரம் உணவகம், drive-thru வசதியை கொண்டதாகும். மலேசியாவில் drive-thru வசதியை கொண்ட முதலாவது இந்திய உணவகம் என்பதற்காக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
வாடிக்கையாளர்களின் அபரிமித ஆதரவினால் வெற்றி நடைப்போட்டு வரும் ஜெகன் குமார், தமிழ் மற்றும் ராஜ் ஆகியோரை வர்த்தக சகாக்களாக கொண்டுள்ள ரவாங் கார சாரம் உணவகத்தின் இந்த மன மகிழ்வுக்குரிய மூன்றாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்னிசை நிகழ்வுடன் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் goody bags வழங்கப்பட்டது.
புதிய தோற்றம், புதிய பொலிவு, புதிய சூழல் ஒருங்கே பெற்றுள்ள ரவாங் கார சாரம் உணவகம், தற்போது வாடிக்கையாளர்களின் தேர்வுக்குரிய உணவகமாக மாறியுள்ளது என்று நிகழ்வில் கலந்து கொண்ட பலர் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.





