மஹ்கோட்டா தேர்தல் முடிவு 9 மணிக்கு வெளியிடப்படலாம்

குளுவாங் , செப்டம்பர் 28-

இன்று நடைபெற்று வரும் ஜோகூர் , மஹ்கோட்டா சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் முடிவு, இரவு 9 மணிக்கு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையமான SPR தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹாருன் தெரிவித்துள்ளார்.

மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடம் பெற்றுள்ள குளுவாங் நகரில் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட பகுதியாகும். நகருக்கு அருகிலேயே வாக்களிப்பு மையங்கள் உள்ளன.

எனவே இரவு 9 மணியளவில் தேர்தல் முடிவு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று மதியம், குளுவாங், திவான் ஜூப்லி இந்தான் வாக்களிப்பு மையத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.


இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் 40 வயது சையத் ஹுசைன் சையத் அப்துல்லா – வுக்கும், / பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் 61 வயதுமுகமது ஹைசன் ஜாபர் – க்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS