அதிகமான நல்லிணக்க சாலைகள் உருவாக்கப்படும்

பயான் பாரு ,செப்டம்பர் 28-

மலேசிய மக்களிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் ஊக்கவிக்கவும், வலுப்படுத்தவும் பினாங்கு மாநிலத்தில் Streets of Harmony என்ற நல்லிணக்க சாலைகள் அதிகமாக உருவாக்கப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

தற்போது பினாங்கு மாநிலத்தில் பலதரப்பட்ட சமயத்தவர்களின் வழிகாட்டுத்தளங்களைக் கொண்ட Streets of Harmony என்ற நான்கு பகுதிகள் உள்ளன. இவை ஒவ்வொரு பகுதியிலும் நல்லிணக்க முறையில் வீற்றுள்ளன என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஜார்ஜ் டவுன் கபிடன் கெலிங் பள்ளிவாசல், /செபெராங் ஜெயா / புக்கிட் மெர்தஜாம் , மற்றும் / புதியதாக பயான் லெபஸ் ஆகிய நான்குப் பகுதிகளில் Streets of Harmony சாலைகள் உள்ளன என்று சௌ கோன் இயோவ் சுட்டிக்காட்டினார்.

இந்த நான்கு இடங்களும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக Streets of Harmony என்று அழைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேபோன்று அம்பாங் ஜாஜர் மற்றும் பட்டர்வொர்த் ஆகிய பகுதிகளிலும் Streets of Harmony சாலைகள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் கோடிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS