164 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 28-

கோலாலம்பூர், ஜாலான் லோகே இயூ கேளிக்கை மையம் ஒன்றில் நேற்று இரவு குடிநுழைவுத்துறை அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 164 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

பேரங்காடி ஒன்றில் அமைந்துள்ள அந்த கேளிக்கை மையம், ஆயிரம் வெள்ளி முதல் ஒரு லட்சம் வெள்ளி வரையிலான கட்டணத்தில் அந்நியப் பெண்களின் GRO பொது உபசரணை தொடர்பு சேவையை வழங்கி வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.ந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகாரிகள் அந்த மையத்தில் நுழைந்த போது
அவர்களிடமிருந்து தப்ப முயன்ற சில பெண்கள் கீழே விழுந்து
காயங்களுக்குள்ளாயினர். பலர், கழிப்பறை மற்றும் ஸ்டோர் அறைகளில் பதுங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

.
நேற்றிரவு 11.45 மணி தொடங்கி விடிற்காலை 1.30 மணி வரை நீடித்த
இந்த சோதனை நடவடிக்கையில் 21 முதல் 60 வயது வரையிலான 164
பேர் கைது செய்யப்பட்டனர் என்று கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை
இயக்குநர் வான் முகமது சௌபீ வான் யூசாஃப் கூறினார்.

WATCH OUR LATEST NEWS