ஜொகூர் , செப்டம்பர் 28-
ஜோகூர்பாரு, தமன் தேசா செமர்லாங், ஜாலான் அரா -வில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவில் 58 வயது மாதுவிடம் நடத்தப்பட்ட வழிப்பறிக்கொள்ளை தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.
தனியொரு நபராக சென்று கொண்டிருந்த மாதுவின் அருகில் பின்தொடர்ந்து வந்த வேன் ஒன்றிலிருந்து இறங்கிய இரண்டு நபர்கள், அந்த மாதுவை மடக்கி ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டுள்ளனர் என்று செரி ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் அந்த மாது எவ்வித காயத்திற்கும் ஆளாகவில்லை. எனினும் 500 வெள்ளி ரொக்கத்தைப் பறிகொடுத்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.