வயதானவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்

ஷா ஆலம், செப்டம்பர் 28-

ஓன்லைன் மோசடி சம்பவங்களில் வயதானவர்களே அதிக அளிவில் பாதிக்கப்படுகின்றனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரையில் பதிவான ஓன்லைன் மோசடிகள் தொடர்பான புகார்களை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்ததில் வயதானவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாாக தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓன்லைன் மோசடிகளில் மொத்த இழப்புகளில் 25 கோடியே 53 லட்சத்து 67 ஆயிரத்து 680 வெள்ளி அல்லது 27.9 விழுக்காடு, வயோதிகர்கள் சம்பந்தப்பட் இழப்புகளாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS