லெம்பா கிளாங் ராயா பெரும் திட்டம் சாத்தியமற்றப் பணி அல்ல

ஷா ஆலம், செப்டம்பர் 28-

கிள்ளான் பள்ளத்தாக்கைப் போன்று சிலாங்கூர் மாநிலத்தில் உத்தேச லெம்பா கிளாங் ராயாபெரும்திட்டமானது, சாத்தியமற்றப் பணிக்குரியது அல்ல என்று மாநில உராட்சிமன்ற மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எங் ஸ்வீ லிம் தெரிவித்துள்ளார்.

இன்னும் பத்து ஆண்டுகளில் சிலாங்கூர் அரசு மிக கவனமாக அந்த பெரும் திட்டத்ததை செயல்படுத்துவது மூலமே அதன் மகத்துவத்தை பின்னளில் உணர முடியும் என்று அவர் குறிப்பட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் லெம்பா கிளாங் ராயா என்ற பெரும் திட்டம் உருவாகுவது மூலம் கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா ஆகிய நான்கு நகரங்களை இணைக்கக்கூடிய metropolitan போன்ற ஒரு பெரிய நகரம் உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த பத்தாண்டுகளில் உருவாகக்கூடிய லெம்பா கிளாங் ராயா என்பது ஒரு லண்டன், ஒரு தோக்கியோ அல்லது ஒரு விக்டோரியா நகரைப் போன்று விளங்கும் என்று எங் ஸ்வீ லிம் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS