தீபாவளி மறுவாரத்திலேயே வீடுகளை காலி செய்ய வேண்டுமா? / கோம்பாக் மாவட்ட – நில அலுவலகத்தின் அதிகார துஷ்பிரயோகம்?

பத்துகேவ்ஸ்,செப்டம்பர் 28-

பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட்டை சேர்ந்த 40 இந்திய குடும்பங்கள் போலீசில் புகார்

பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் இந்தியர்களின் தனித்துவமான குடியிருப்புப்பகுதியாக சுமார் 70 ஆண்டு காலமாக நிலைநிறுத்தப்பட்டு வரும் இந்தியன் செட்டில்மெண்ட்டில் சாலை விரிவாக்கம் என்று கூறி, 40 குடும்பங்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று 60 நாள் காலக்கெடு அடிப்டையில் நோட்டீஸ் கொடுத்து இருக்கும் கோம்பாக் மாவட்டம் மற்றும் நில அலுவலகத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

தங்களை வெளியேற்றுவதில் மிகப்பெரிய மோசடி வேலைக்கான தந்திரத்தை கோம்பாக் மாவட்ட நில அலுவலக அதிகாரியும், அதன் பொறுப்பாளர்களும் கையில் எடுத்துள்ளனர் என்று பாதிக்கப்பட்ட மக்கள், Prima Sri Gombak, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 1956 ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டு, இந்தியர்கள் மறுகுடியேற்றம் செய்யப்பட்ட பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எனினும் சாலை விரிவாக்கம் என்று கூறி, 40 வீடுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருப்பதை அவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என்பதுடன் தங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 1956 ஆண்டிலிருந்து தங்கள் நிலத்திற்கான வருடாந்தி பிரமியத்தொகை, தண்ணீர், மீன்சார விநியோகத்திற்கான கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்ட நிலையில் தங்களுக்கான 99 வருடத்திற்குரிய நிலப்பட்டா உரிமை 2112 ஆம் ஆண்டு காலவாதியாகிறது.

அதற்கான முறையான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை தாங்கள் கொண்டுள்ள வேளையில் அரசாங்கம் நிலத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பதாக கூறி, புறம்பபோக்குவாசிகளைப் போல் விரட்டுவதற்கு நோட்டீஸ் வழங்கியிருக்கும் கோம்பாக் மாவட்ட நில அலுவலக அதிகாரியை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிலாங்கூர் மந்திரி பெசார்டத்தோஸ்ரீ அமுருதீன் ஷாரி யின் சொந்த சட்டமன்றத் தொகுதியான Sungai Tua-வில் அவரின்வெற்றிக்காக வாக்களித்த எங்களுக்கு அவர் காட்டும் நன்றிக்கடன் இதுதானா என்று முன்னாள் அரசாங்கப் பணியாளரான 63 வயது பாலகிருஷ்ணன் வீராசாமி கேள்வி எழுப்புகிறார்.

தங்கள் எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உடனடியாக தலையிட வேண்டும் என்கிறார் ஒரு மாற்றுத்திறனாளியான 76 வயது பெரியவர் ராகவன் வேலுச்சாமி.

சொந்த வீட்டிற்கான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் கொண்டு இருக்கும் பட்சத்தில் திடீரென்று நோட்டீஸ் கொடுத்து, 60 நாளில் வீட்டை வெளியேறச் சொன்னால் நாங்கள் எங்கே போவது என்கிறார் 52 வயதான மங்களகீதா இராமசாமி.

முறையான ஆவணங்களை கொண்டிருக்கும் நாங்கள், அந்த நிலத்தில் அத்துமீறி வீடு கட்டியிருக்கிறோம் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பது எந்த வகையில் நியாயம் என்கிறார் 68 வயது கோவிந்தராஜு நாராயணசாமி.

ஒரு பாரம்பரிய கிராமமான இந்தியன் செட்டில்மெண்டில மாற்றுத் திறனாளிகள் அதிகமாக உள்ளனர். திடீரென்று அவர்களை வெளியேற்றினால் அவர்கள் எங்கே போவார்கள் என்று குடியிருப்புவாசி குகேந்திரன் வினவுகிறார்.

மலேசிய தமிழர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கண்ணன் மற்றும் செயலாளர் ஈஸ்வரி சுப்பிரமணியம் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள பத்துகேவ்ஸ், இந்தியன் செட்டில்மெண்ட் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள 40 குடும்பங்களின் விவகாரத்தில் கோம்பாக் மாவட்ட நில அலுவலகத்தில் மிகப்பெரிய முறைகேடு நிகழ்ந்து இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இவ்விவகாரதத்திற்கு கோம்பாக் மாவட்ட நில அலுவலகம் உடனடியாக தீர்வு காணவில்லை என்றால் இதனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாக ரமேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Caption

பாலகிருஷ்ணன் வீரசாமி,
குடியிருப்பாளர்

ராகவன் வேலுச்சாமி,
குடியிருப்பாளர்

மங்களகீதா,
குடியிருப்பாளர்

கோவிந்தராஜு நாராயணசாமி,
குடியிருப்பாளர்

குகேந்திரன்
குடியிருப்பாளர்

WATCH OUR LATEST NEWS