பதங் டெராப்,செப்டம்பர் 28-
கெடாவில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் மாது ஒருவரும், அவரின் பேறு குறைந்த மகனும் நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை காலையில் கெடா,பதங் டெராப், குவாலா நெராங், ஜாலான் பதங் சனை, கம்புங் தஞ்சங் கிரி -யில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒரு மாற்றுத் திறனாளியான 19 வயது மகன் முஹம்மது ரோஸ்மன் ரோஹைடி என்பவரின் உடல் மாலை 5.25 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக கெடா மாநில தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி அஹ்மத் அமினுதீன் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
அந்த இளைஞரின் தாயார் 46 வயது சல்மா மாட் ஜைன் என்பவரை தேடும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.