குளுவாங் , செப்டம்பர் 28-
இன்று நடைபெற்று முடிந்த மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதியில் வாக்களிப்பு நேரம் முடிவடைவதற்கு மாலை 6 மணிக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த வேளையில் ஒரு நிமிடம், தாமதமாக வாக்களிப்பு மையத்திற்கு தாம் வந்ததால் வாக்களிக்க இயலாமல் போனது என்று 41 வயது விஜயன் என்பவர் தமது ஆதங்கத்தை தெரிவித்துக்கொண்டார்.
மஹ்கோட்டா தொகுதி வாக்காளரான சிங்கப்பூரில் வேலை வேலை செய்து வரும் விஜயன், இந்த இடைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு குளுவாங்கிற்கு வந்ததாக குறிப்பிட்டார்.
கடும் மழைக்கு மத்தியில் வாக்களிப்பு மையத்தை வந்தடைந்த போதிலும் ஒரே ஒரு நிமிடம் தாமதமானதால் வாக்களிக்க முடியாமல் போனதாக குறிப்பிட்டார்.
தாம் வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைவதற்குள் வாக்குச் சாவடி மூடப்பட்டுவிட்டதாக அறிவிப்பு ஒட்டப்பட்டு விட்டது என்று விஜயன் தமது அதிருப்தியை தெரிவித்தார்.