பெய்ரூட் ,செப்டம்பர் 28-
தாங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் Beirut மீது நேற்று வெள்ளிக்கிழமை தாங்கள் நடத்திய தாக்குதலில் லெபனான் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.