மஹ்கோட்டா இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி

குளுவாங் , செப்டம்பர் 28-

இன்று நடைபெற்ற ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் நான்கு மடங்கு பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் அந்தத் தொகுதியை பாரிசான் நேஷனல் தற்காத்துக்கொண்டது.

பாரிசான் நேஷனலுக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் நடைபெற்ற நேரடிப் போட்டியில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் 40 வயது சையத் ஹுசைன் சையத் அப்துல்லா 20,648 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாரிசான் நேஷனல் வேட்பாளர் சையத் ஹுசைன் – க்கு 27 ஆயிரத்து 941 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் 61 வயது முகமது ஹியாசன் ஜாபர் – க்கு 7 ஆயிரத்து 347 வாக்குகளும் கிடைத்தன என்று தேர்தல் அதிகாரி வான் அசுராவதி வாஹித் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS