குனாக் , அக்டோபர் 01-
முதலையால் கடித்து குதறப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் தோட்டத் தொழிலாளர் ஒருவரின் பாதி உடல், ஆற்றோரத்தில் மண்ணில் செருகிக்கொண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கால்கள் மற்றும் உடலின் ஒரு பகுதி இல்லாத நிலையில் வெறும் தலையுடன் அந்த உடல் அவயம் , சபா, குனாக் – கில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அருகில் ஆற்றோர சதுப்புநிலப்பகுதியில் இன்று காலை 9.41 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக குனாக் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் முகமது ஓமபதா தெரிவித்தார்.
அது இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போன 50 வயது மதிக்கத்தக்க ஒரு தோட்டத் தொழிலாளியின் உடல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.