கோலாலம்பூர், அக்டோபர் 01-
கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சிலாங்கூர், பந்தர் ஸ்ரீ தமன்சாரா- வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்கமாடி வீட்டில் வடிவமைப்பாளர் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் வேலையற்ற நபர் ஒருவர், இன்று புதன்கிழமை பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் 50 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷருல்நிஜாம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் பொருட்கள் சிதறிக்கிடந்த நிலையில் 36 வயது அந்த வடிவமைப்பபாளர், உடலில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர், பிடிபட்டதாக ஏசிபி ஷருல்நிஜாம் குறிப்பிட்டார்.