குச்சிங்,அக்டோபர் 01-
அரசாங்க ஊழியர்களில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உடல் ரீதியாக சுகாதாரப்பிரச்னையை எதிர்நோக்கியுள்ளனர் என்று பொதுச் சேவை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ வான் அகமது தஹ்லான் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் முதல் தேதி உருவாக்கப்பட்டுள்ள பொதுச் சேவை ஊழியர்களின் சுகாதார நிலையை கண்டறியும் MyPsyD மூலமாக இந்த தரவுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் அபாயகர நோய்களிலிருந்து பொதுச் சேவை ஊழியர்கள் முன்கூட்டியே விடுபடுவதற்கும், தடுப்பதற்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.