வரி செலுத்துவோரின் வருமான ரகசியம் பாதுகாக்கப்படும்

கோலாலம்பூர், அக்டோபர் 01-

நாட்டில் ஆக்ககரமான, பயனுள்ள, நியாயமான மற்றும் சமமான வரிவிதிப்பு செயல் முறையை உறுதி செய்வதற்கு இணைய தொடர்புகள் மூலம் வரி செலுத்துவோரின் உரிமைகளும் பாதுகாக்கப் படுவதை உள்நாட்டு வருமான வாரியம் எப்போதும் உறுதி செய்யும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

வரிவிதிப்பு மீதான அனுகுமுறைகளை வரி செலுத்துவோர் அறிந்துக் கொள்ள, அதன் விவரங்களை வருமான வரி வாரியத்தின் இணையத்தளம் வாயிலாக தாங்கள் வெளியிட்டு வருவதாக அந்த வாரியத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கு சட்டப் பிரிவு மக்கள் தொடர்பு அதிகாரி நூர் சியாஸ்வானி ஹம்சா கூறினார்.

வரி செலுத்துவோர் தங்கள் சமீபத்திய முகவரியை வருமானவரி வாரியத்தின் MyTax அகப்பக்கத்தில் உள்ள e- update வாயிலாக அல்லது எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கோருகிறோம் என்று அவர் கூறினார்.


வெளிநாட்டுப் பயணத்தைத் தீர்மானிப்பதற்கு முன் பொதுமக்கள் தங்களின் சமீபத்திய வரி நிலை மற்றும் பயணக் கட்டுப்பாடு தொடர்பான நிலவரங்களை முன்கூட்டியே MyTax செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் என அவர் ஆலோசனை கூறினார்.

WATCH OUR LATEST NEWS