கோலாலம்பூர், அக்டோபர் 01-
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, சபா,லஹாட் டத்து , வில் அத்துமீறி நுழைந்து, ஊடுருவிய பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக மரணத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட 7 பிலிப்பைன்ஸ் பிரஜைகளின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் செவிமடுக்கவிருக்கிறது.
மாமன்னருக்கு எதிராக போர் தொடுத்த குற்றத்திற்காக இந்த 7 பேருக்கும் மரணத்தண்டனை விதிக்கப்பட்டது.
தங்களுக்கு எதிரான தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரும் அந்த 7 பிலிப்பைன்ஸ்ப பிரஜைகளின் மேல்முறையீட்டை புத்ராஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றம் நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு விசாரணை செய்யவிருக்கிறது.
அந்த 7 பேருக்கும் மரணத் தண்டனையை ரத்து செய்து, அவர்களுக்கு கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிப்பதற்கு கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளுக்கு நடப்பு சட்டம் அதிகாரம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.