ஜார்ஜ் டவுன், அக்டோபர் 01-
பினாங்கில் சட்டவிரோத வட்டி முதலைகளான Along- கின் ஆசைநாயகியாக தாம் தள்ளப்பபட்டுள்ளதாகவும், சிவப்பு விளக்குப்பகுதியில் பாலியல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் Tik Tok சமூக வலைத்தளத்தில் பேசி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 26 வயது பெண்ணை கண்டுப்பிடிப்பதில் போலீசார் வெற்றி பெற்றுள்ளனர்.
செபராங் பேரை உடரா-வில் ஒரு வீட்டில் அந்தப் பெண்ணை கண்டுபிடிப்பதற்கு முன்னதாக நேற்று இரவு 10.50 மணியளவில் பினாங்கு மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறையினர், அந்தப் பெண்ணை அடையாளம் கண்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.
அந்தப் பெண்,சில வட்டி முதலைகளிடம் கடன் வாங்கியிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளையில் தாமும் தமது தாயாரும் வட்டி முதலைகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பெண் கூறிய இதர சில விஷயங்கள் கட்டுக்கதை என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் 506 மற்றும் தொடர்பு, பல்லூடகத் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக டத்தோ ஹம்சா மேலும் கூறினார்.