E-hailing பெண் ஓட்டுநரின் கொள்ளையடித்த நபர் கைது

கோட்டா திங்கி,அக்டோபர் 02-

ஜோகூர், கோத்தா திங்கி, கோலா செடெலி, பாண்டாய் தஞ்சூங் புலுஹ் அருகில் சாலையோரத்தில் E-hailing பெண் ஓட்டுநரிடம் வழிபறி கொள்ளையில் ஈடுபட்ட ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்றத் தகவலை அடிப்படையாக கொண்டு அந்த நபர், கோத்தா திங்கி, தமன் டைமன் ஜய -வில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டார்.

இவ்வழிபறி கொள்ளை தொடர்பில் கடந்த வியாழக்கிழமை மாலை 5.25 மணியளவில் கோலா செடெலி, போலீஸ் நிலையம், 52 வயதுடையை பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து போலீஸ் புகார் ஒன்றை பெற்றதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் யூசப் ஓத்மான் தெரிவித்தார்.

வாகனத்தை செலுத்தியது மூலம் அன்றைய வருமானமாக அந்தப் பெண் வைத்திருந்த 860 வெள்ளியை 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், கொள்ளையிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று யூசப் ஓத்மான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS