41 பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும்

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 02-

பினாங்கு, செபராங் பெரை தெங்கா மற்றும் செபராங் பேரை செளதன் ஆகிய மாவட்டங்களில் 41 பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் சனிக்கிழமை இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகத்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவ்விரு மாவட்டங்களிலும் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 93 பயனீட்டாளர்கள் பாதிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக பினாங்கு குடிநீர் விநியோகக் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ K. பத்மநாபன் அறிவித்துள்ளார்.

பெர்மாதாங் பாவ்- வில் செபராங் பிறை போலி டெக்னிக் பயிற்சி மையத்திற்கு அருகில் பழுதடைந்துள்ள பிரதான நீர் குழாய்களை மாற்றும் பணி நடைபெறவிருப்பதால் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS