கோலாலம்பூர், அக்டோபர் 02-
புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024, ஏகாலத்தில் அமலுக்கு வந்திருப்பதை Dinamik Sinar Kasih Malaysia சமூக அமைப்பின் தலைவர் டத்தோ N. சிவகுமார் வரவேற்றுள்ளார்.
அதேவேளையில் புகைப்பிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அமலாக்கம், பொது இடங்களில் குறிப்பாக வழிபாட்டுத்தலங்களிலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
தேவஸ்தானத்தின் மேற்பார்வையில் உள்ள பத்துமலைத்திருத்தலம், வழிபாட்டுத்தலமின்றி மலேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும் விளங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை புரிகின்றனர்.
பத்துமலை போன்ற வழிபாட்டுத் தலங்கள், மின்னியல் சிகரெட் அல்லது Vape உட்பட புகைப்பிடிக்கும் செயல்களிலிருந்து விடுப்பட்டு இருப்பதை உறுதி செய்வதற்கு இச்சட்டத்தின் அமலாக்கம் மிக முக்கியமாகும்.
எனவே பத்துமலை திருத்தலம், இச்சட்டத்தின் கீழ் புகைப்படிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதியாக அரசாங்க பதிவேட்டில் இடம் பெறச்செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சை டத்தோ சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் சுற்றுப்பயணிள் உட்பட அனைத்து தரப்பினரும் பத்துமலைத் திருத்தலத்தில் புகைப்பிடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். யாரேனும் இச்சட்டத்தை உதாசீணப்டுத்துவார்களோயானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு இச்சட்டம் வகை செய்யும் என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.