சிறப்பு விசாரணைக்குழு அமைக்ககப்பட்டது

ஷா ஆலம், அக்டோபர் 02-

தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பெண் மருத்துவ நிபுணர் ஒருவர், சபா, லஹத் டத்து அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த காலத்தில் பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ Dr Dzulkefli Ahmad இன்று அறிவித்தார். மருத்துவம், மனநலம், சுகாதாரம் மற்றும் பகடிவதை தடுப்பு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் கொண்டுள்ள ஐவர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவினர், இவ்விவகாரத்தை விசாரணை செய்வர்.

இந்த சிறப்பு விசாரணைக்குழு, முன்னாள் பொதுச் சேவைத்துறை தலைமை இயக்குநர் Tan Sri Borhan Dollah தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் டே டியென் யா என்ற அந்த பெண் மருத்துவ நிபுணர்,லஹாட் டத்து மருத்துவமனையில் தனது மேல் அதிகாரியின் பகடிவதையை தாங்கிக்கொள்ள முடியாமல் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தாம் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS