புத்ராஜெயா,அக்டோபர் 02-
மோட்டார் சைக்கிள்களுக்கான B1 ( B ஓன் ) மற்றும் B2 ( B டூ ) ஆகியவற்றின் லைசென்ஸ் தரம், B Full லைசென்சுக்கு உயர்த்த விரும்புகின்றவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்துவதற்கு போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
தங்களின் லைசென்ஸ் தரத்தை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றவர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக B1 ( B ஓன் ) மற்றும் B2 ( B டூ ) லைசென்சை கொண்டிருந்தால் மட்டும் போதுமானதாகும். மாறாக, B Full லைசென்சுக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட லைசென்சுகளை தீவிர செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுப் படுத்தியுள்ளார்.